உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராணா பிரதாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராணா பிரதாப்
மகாராஜா பிரதாப்
மேவாரின் ஆட்சியாளர்
ஆட்சி1568 – 1597
முன்னிருந்தவர்மகாராணா இரண்டாம் உதய் சிங்
வாரிசு(கள்)17 ஆண்கள், 5 பெண்கள்
மரபுசூரியவன்ஷி ராஜபுத்திரர்கள்
தந்தைமகாராணா இரண்டாம் உதய் சிங்
தாய்மகாராணி ஜவந்தா பாய்
சமயம்இந்து

மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (ஆங்கிலம்: Maharana Pratap), மே 9, 1540 - ஜனவரி 19, 1597) வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார்.[1] அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர். ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.[2]

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்

[தொகு]

4 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகளுக்கு, மூத்தவராக, கும்பால்கர் என்ற இடத்தில் (தற்போது ராஜஸ்தானில் ராஜ்சமந்து மாவட்டத்தில் உள்ளது) பிரதாப் பிறந்தார், அவரது பெற்றோர்கள் மகாராணா இரண்டாம் உதய்சிங் மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள்.[3]

வாரிசாக பதவியேற்றல்

[தொகு]

1568 ஆம் ஆண்டில், இரண்டாம் உதய்சிங் அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர், கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன்கட்டை ஏறித் தீக்குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள்.[4]

இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார்.[5] இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை.[6] எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர்.[7] அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது.[8]

மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார்.[9] அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார்.[10]

டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி, தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்:

மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள்.[11]

இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது.[12]
ஹால்டிகாட்டி போரின் இடத்தில் மஹாராணா பிரதாப்பின் சிலை.

முரண்பாடு

[தொகு]

சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை.[13]

ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர்.[14] உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.[15][16] அக்பர் மொத்தத்தில் ஆறு ராஜதந்திர தூதுக்குழுக்கள் அனுப்பி, சமாதான உடன்பாடு எப்படி பிற ராஜபுத்திரர்கள் செய்து கொண்டனரோ அதேபோல் பிரதாப்பையும் செய்து கொள்ள வலியுறித்தினார். பிரதாப் ஒவ்வொரு முறையும் முழுக்கமுழுக்க மறுதலித்தார், அதன்மூலம் தனது தற்பெருமையை வெளிப்படுத்தினார்.[17]

புதிய தலைநகர்-உதய்பூர் உருவாக, மஹாராணா உதய்சிங் ஒரு நீர்த்தேக்கம்-உதய்சாகர் எனும் பெயரில் 1565 ஆம் ஆண்டில், கட்டிமுடித்தார். அந்த அணைத்திட்டத்தில் ஜூன் 1573இல், அம்பரின் குன்வர் (இளவரசர்) மான்சிங், மொகாலய பேரரசர் அக்பரின் தூதுவராகச் சந்தித்து, வீம்பு முனைப்பாக இல்லாமல், மஹாராணா பிரதாப்பை உடன்படிக்கைக் குறிப்புகளைக் கைவிட்டு, அவருக்கு மதிப்பளிக்க விருந்தில் வந்து கலந்துகொள்ள வற்புறுத்தினார்.[18] பிரதாப் மற்றும் மான்சிங் இருவரும் ஒரேதலைமுறையைச் சார்ந்தவர்களாவர், குன்வர் மான்சிங் பிறந்தநாள் ஞாயிறு டிசம்பர் 21, 1550, ஆகும், ஆனால் பிரதாப் அரசராகிட மான்சிங் இளவரசானார். பிரதாப், உடன்படிக்கைக் குறிப்புகள் பின்பற்றி, தனது மகன் குன்வர் அமர்சிங்கை அந்த விருந்தில் அக்பரின் தூதுவராக வந்த குன்வர் மான்சிங்குடன் பங்கேற்கச் செய்தார். இந்த நிகழ்ச்சி மொகல்-மேவார் முரண்பாட்டை மேலும் துரிதப்படுத்தியது.[19]

மான்சிங் ஒரு குன்வராக இருந்தமையால், அவரது தந்தை ராஜா பகவன்தாஸ் மற்றுமொருமுறை ஒரு சமாதானத் தூதுக்குழுவை நடத்தித் தோல்வி கண்டார், அக்டோபர் 1573இல் நடந்த நிகழ்வில் ராணா பிரதாப் உடன் இருந்தார்.[20]

ஹல்டிகாடி போர்முனை

[தொகு]
உதய்பூரில் உள்ள மஹாராணா பிரதாப்பின் சிலை.

ஜூன் 21, 1576 தேதி (ஜூன் 18 மற்ற கணக்குகள் படி), இரண்டு படைகளும் ஹல்டிகாட்டில் சந்தித்தன. இரண்டு படைகளின் கணக்கீடுகள் மாறுபட்டு இருந்தாலும், எல்லா வழிமூலங்களும் ஒரே கருத்தில் ஒத்திருந்தன, அதாவது, மொகலாயப் படைகள் அதிக அளவில் பிரதாப்பின் வீரர்களைக் காட்டிலும் (1:4) விஞ்சி இருந்தன.[21] ஹல்டிகாடி யுத்தம், ராஜபுதனா ஆண்டுத்தொகுப்பேடுகளின்படி, ஒரு பெரும் வரலாற்று நிகழ்ச்சியாகும், அதுவும் நான்கு மணி நேரமே நீடித்தது. இந்தக் குறுகிய காலத்தில், பிரதாபின் வீரர்கள் பலதுணிகர சாகசங்களை களத்தில் நிகழ்த்திக் காட்டினார்கள். மக்கள்மரபு ஆராய்ச்சியின்படி பிரதாப் தனியாக மான்சிங்கைத் தாக்கினார்: அவரது சேட்டக் குதிரை தனது முன்னங்காலை மான்சிங்கின் யானையின் மீது வைத்தது மற்றும் பிரதாப் தனது ஈட்டியை எறியும் சமயம் மான்சிங் திடுமெனக் குனிந்து தலைதாழ்த்தியதால், பாகன் இறந்தார்.[22][23]

எனினும், மொகலாயப் படையின் எண்ணிக்கை மேம்பாடும், மற்றும் அவர்களது பீரங்கிப்படையும் போர்க்களத்தில் விஞ்சியது. தோல்விமுகம் கண்டதால், பிரதாபின் தளபதிகள் களத்தை விட்டு அவரை ஓடிவிட வற்புறுத்தினார்கள் (அப்பொழுது தான் அவரால் மீண்டும் போர் தொடுக்க இயலும்.) புராணக் கதைகளின்படி, பிரதாப் தப்பிச் செல்வதை வசதிப்படுத்த, அவரது படைத்தலைவர்களில் ஒருவர், ஜ்ஹல வம்சம் சார்ந்தவர், பிரதாபின் குறிப்பிடத்தக்க அங்கிகளை அணிந்து போர்க்களத்தில் அவரது இடத்தில் அமர்ந்தார். விரைவில் அவர் இறந்தார். இதற்கிடையில், தனது நம்பகமான குதிரை சேத்தக் மீது சவாரி செய்து, பிரதாப் குன்றுகள் நோக்கி தப்பிச் சென்றார்.[24]

ஆனால் சேத்தக் தனது இடது தொடையில் ஒரு மர்தானா மூலம் (யானைத் தும்பிக்கையில் உள்ள உறைவாள்) பிரதாப் மான் சிங்கைத் தாக்க முற்படும் போது ஆபத்தான காயம் ஏற்பட்டது. அதிகக் குருதி வெளிவரவே சேடக் ஒரு சிற்றோடையைத் தாண்டும் பொழுது அதுவும் போர்க்களத்தில் சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இறந்து போனது. பிரதாப்பின் படைத்தலைவன் அவர் போல உடையும் ஆயுதமும் தரித்து இடமாற்றம் செய்தது யுத்தத்தில் குழப்பங்களிடையே கண்டுகொள்ள முடியாமல் போனது, ஆனாலும் மொகலாயப் படையில் இரண்டு துருக்கிய வீரர்கள் மட்டும் உண்மையையைக் அறிந்துகொண்டனர். அவர்கள் குழுவில் அதை மற்றவர்களிடம் கூற முடியவில்லை, ஏனெனில் மொழி பேசுவதில் உள்ள தடையே (பாரசீகம், மார்வாரி, அல்லது அரபி மொழிகள் மட்டுமே மொகலாயப் படையில் வழக்கத்தில் இருந்தன). ஆயினும் அவர்கள் பிரதாபைப் நேரத்தை வீணாக்காமல் பின்தொடர்ந்தனர். அவர்கள் பிரதாபைப் பின்தொடர்ந்த தருணம், அவரது இளைய சகோதரர், ஷக்திசிங், அதாவது அவர் மொகலாயர் பக்கமாக இருந்து போரிடுபவர், (பிரதாப் முடிசூட்டு விழாவில் அவருடன் ஏற்பட்ட சச்சரவால் அக்பர் பக்கம் கட்சி மாறியவர்) அந்த நேரம் தனது சொந்த சகோதரர் ஆபத்தில் சிக்கியுள்ளதை உணர்ந்தார்.[25] பிரதாபின் படைத்தலைவர் அவருக்காக உயிர் துறந்ததை அவர் கண்டார். அவரால் உதவ முடியவில்லை எனினும் அவர் தனது சொந்த சகோதரர் ஆபத்தில் உள்ளதை அறிந்து உடனடியாகச் செயல்படத் தொடங்கினார். அவர் அந்த துருக்கியர்களுடன் ஒற்றை ஆளாகப் போரிட்டு, அவர்களைக் கொன்றார். இதற்கிடையில், சேடக் மரணமடைந்தது மற்றும் பிரதாப் தனது சகோதரர் ஷக்திசிங், அந்த இரு மொகலாய குதிரை வீரர்களைக் கொல்வதை நேரில் கண்டார். தனது அன்பிற்கினிய படைத்தலைவன் மற்றும் குதிரை இரண்டின் இழப்பால் துக்கமுற்ற பிரதாப், தனது சகோதரரைக் கண்ணீர் மல்கக் கட்டித் தழுவினார். சக்திசிங் கூவி அழுது தனது சகோதரரின் எதிரியாக மாறியதற்கு மன்னிப்பைக் கோரினார். பிரதாப் அவரை மன்னித்தருளினார் (பின்னாளில் அவருக்கு சித்தூர் அருகே ஒரு பெரிய பண்ணைத் தோட்டத்தை வழங்கினார்). சக்திசிங் அதன்பின் தனது குதிரையை சகோதரருக்கு அளித்து ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல தயவுடன் கேட்டுக்கொண்டார்.[26] ராஜஸ்தானி நாடோடிப்பாடலின்படி, ஒரு பாட்டு "ஒ நீலே கோடே ரே அஸ்வர்" ( ஒ நீலப்புரவி வீரனே!)

சேடக்கிற்காக ஒரு கல்லறை மாடம் அதன் மரணமுற்ற அதே இடத்தில் அதன்நினைவாக அமைத்தது.[27]

யுத்தத்தின் விளைவு மொகலாய ராணுவத்தில் குறிப்பிடத்தக்க முறையில் பாதித்தது. எண்ணற்ற முகலாய போர் வீரர்கள் மாண்டனர். பிரதாப் பக்கம் நின்ற சுற்றுப்புற குன்றுகளில் வாழும் பில் பூர்வீக மக்கள் பலமாக அம்புகள் ஏவியதால் மொகலாயப் படையினர் அதிகம் பாதிப்படைந்தனர்.[28] அவர்களது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒரு பில் போர்வீரன் மேவாரில் உள்ள அரசகுடும்ப அணிகல வரிசையில் பிரதாபிற்கு அடுத்ததாக அமர்த்தப்பட்டார்.

ஹல்டிகாட் யுத்தம் மொகலாயர்களிடம் ஒரு வல்ஊடுவழி காண வாய்த்த முதல் யுத்தமாகும், 1527 ஆம் ஆண்டில், இரண்டாம் கான்வா யுத்தமும் ராஜபுத்திரர்களுக்குச் சாதகமாக அமைந்தது, அந்த இரண்டாம் கான்வா யுத்தம் மஹாராணா பிரதாப்பின் பாட்டனர் ராணா சங்காவிற்கும், அக்பரின் பாட்டனார் பாபருக்கும் இடையே நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பல ராஜபுத்திர குடும்பங்களில் இந்த யுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க முறையில் பெருமையாகக் கருதப்படுகிறது.

ராயல்டி காலத்தில் மகாரா பிரதாப்.

படைத்தலைவர்கள்

[தொகு]

ஹக்கீம் கான் சூர் பதான்

[தொகு]

ஹக்கீம் கான் சூர் பதான் ஆப்கன் ஷெர் ஷா சூரி வம்சாவளியைச் சார்ந்தவராவார். அவர் தனது முன்னோர்களின் வீழ்ச்சியை முன்னிட்டு அதற்குக் காரணமான மொகலாயர்களை பழி வாங்க பிரதாபுடன் சேர்ந்தார். மொகலாயர்கள் திட்டமிட்டு பல கோவில்களை அழித்தார்கள். பிரதாப்பும் மற்ற ராஜபுத்திரர்களும் தங்கள் மதம் காத்திடவே போரிட்டனர். ராஜபுத்திரப் படைகளில் சில முஸ்லிம் கூலிப்படையினர் இருந்ததும், மொகலாயர்களோடு உள்ள முரண்பாடும்,ஹிந்து மதம் காப்பதற்காக அல்ல என்பது நன்கு புலனாகும்.[29][30][31]

ஜால மான்சிங்

[தொகு]

ஜால மான்சிங் (மேலும் ஜால சர்தார் என்றும் அழைக்கப்படுபவர்) சுதந்திரம் பெறும் போராட்டத்துக்காக அபூர்வமான வீரம், துணிச்சல், தியாகம் மூன்றிற்கும் தக்க உதாரணமாகத் திகழ்ந்தார். 1576இல், ஹல்டி காடி போர்க்களத்தில், மஹாராணா பிரதாப் காயம் அடைந்தார். (வாள், ஈட்டி, மற்றும் துப்பாக்கிக் குண்டு ஆகிய மூன்றினால் பட்ட காயங்கள்) அவர் மூர்ச்சை அடைந்து கிடந்ததும், ஜ்ஹல, அச்சமயம் பிரதாப்பின் மகுடம், மற்றும் ராஜ முத்திரைச் சின்னங்கள் யாவையும் களைந்து அவைகளை தானே அணிந்து கொண்டு தான் தான் பிரதாப் என்று மொகலாயப் படைகளை நம்பவைத்து அவர்களின் தாக்குதல்கள் எதிர்கொண்டார். இறுதியாக அவர் தன இன்னுயிர் பிரதாபிற்காகவும் மற்றும் நாட்டு விடுதலைக்காகவும் நீத்து அரிய தியாகம் புரிந்தார். இந்த தியாகத்தினால்தான் பிரதாப் தொடர்ந்து மொகலாயர்களுடன் போரிட்டு மேவாரை மீட்டு, சித்தூர் நீங்கலாக, மீண்டும் தன்ஆட்சியை நிலைநாட்ட முடிந்தது.

உதய்பூரில் இன்றும் கூட, ஜ்ஹலவின் வழிவந்தோர், மஹாராணா வழங்கிய மேவாரின் அரசச்சின்னம் ஏந்திக் கொண்டு வருவதைக் காணலாம். ஸ்ரீ அசோக் தட்டத்ராயா குல்கர்னி கூற்றின்படி, அந்த தைரியம் மிக்க வீரன் மான்சிங் ஜ்ஹலல்ல அவர் பீட ஜால ஆவார். குறிப்பு- மஹாராணா பிரதாபாஞ்ச ராஜ்வன்ஷ் (ஒரு மராத்தி நூல் ஆகும், மேவாரின் வரலாறு மற்றும் குஹிலோட் வம்சாவளியினர் பற்றியும் அதில் உள்ளது).

டோமர்கள்

[தொகு]

ராஜா ராம் ஷா டோமர், குவாலியரைச் சார்ந்தவர், ராணா உதய்சிங் மகளை மணம்புரிந்தவர், தனது குவாலியரை மொகலாயரிடம் இழந்த பிறகு, மேவாரிடம் தஞ்சம் அடைந்தார். அவரும் அவரது முன்னூறுக்கும் மேலான வீரர்களும் ஹல்டிகாடி யுத்தத்தில் பங்கு கொண்டனர். அவர்கள் வம்சத்தைக் காக்க அவருக்கு எஞ்சிய ஒரே மகனை பிகாநேருக்கு பாதுகாப்புடன் இருக்க அனுப்பினார்கள், மற்ற யாவரும் மேவாருக்காக தங்களது இன்னுயிர் நீத்தனர்.[32][33]

பர்குஜர்ஸ்

[தொகு]

பர்குஜர்கள் மேவாரின் நம்பத்தகுந்த சகாக்களாக இருந்தனர் மற்றும் அவர்கள் ராணாவுடன் இறுதி வரைக்கும் சேர்ந்தே போராடினார்கள்.அவர்கள் எந்த ஒரு போர்முனையிலும் முன்வரிசையில் நின்று கடுமையாகப் போரிடும் வீரர்கள் ஆவார்கள்.[34]

பீம்சிங் டோடிய

[தொகு]

பீம்சிங் டோடிய, மேவாரின் பிரபுக்களில் ஒருவர் ஆவார் மற்றும் அவர் மஹாராணா பிரதாப் சிங்கின் கோகுண்ட அவையில் (1576) ஹல்டிகாடி யுத்தத்திற்கு முன்னாலேயே இடம்பெற்றவர் ஆவார்.[35]

சேத்தக்

[தொகு]

சேத்தக், கத்தியவார் பகுதியின் வெள்ளை நிறக் குதிரையாகும். (இந்திய இனம் சார்ந்த திணைத் தோன்றலாகும்) அது குள்ளமான கழுத்து, அடர்ந்து செறிந்த முடிகொண்ட வால், குறுகலான முதுகு, பெரிய விழிகள், கட்டு மஸ்தான தோள்கள், அகன்ற நெற்றி மற்றும் பரந்த நெஞ்சம் கொண்டதாகும். மேலும் பார்வைக்கு வனப்பு மிகுந்ததாகவும், செய்யுள் நடையில் புனிதமாகவும் அது கருதப்பட்டு வந்தது, இப்புரவி ஒரு சமச்சீரான தசைநார் கொண்ட உடலமைப்பு அதற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை அளித்தது, அதனுடைய "பறக்கும்" பாதங்கள் அதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.[36][23] அதுபற்றி மேலும் விளக்குகையில் ஓர் அபூர்வமான, துல்லியமான நுண்ணறிவு படைத்தது என்றும், மேலும் கட்டுப்பாடு மற்றும் துணிவு இரண்டும் ஒருசேர பெற்றதென்பதும், தனது எஜமானிடம் பின்வாங்காத நம்பகமும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.[37]

சேடக், மகாராணா பிரதாபின் குதிரை, ஹல்டிகாட் போர்முனையில் கருணைமறம் (வீரம்) காட்டி இறந்த தருணம், அவர் கூக்குரலிட்டு மற்றும் அவரது கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார்.[38]

ராஜா பூன்ஜா

[தொகு]

பில் போர்வீரர்கள் ஹல்டிகாட் போர்முனையில் ராணா பூன்ஜாவின் தலைமையில் போரிடப் பங்கு கொண்டனர். பில் போர்வீரர்கள் உற்சாகமுடன் ரகசியமான செய்தியாளர்களாகவும் மற்றும் ஓடி தகவல் தெரிவிப்பவர்களாகவும் பணியாற்றினர். மேவார் மாகாண வரலாற்றில் குஹில் இனப்பிரிவினர் தைரிய மிகுந்த சாகசச் செயல்களுக்காக புகழ் பெற்றவர்களாக விளங்கினார்கள். பில் இனத்தாரின் பங்களிப்பு என்பது மறக்க இயலாததாகும். குஹாதித்யாவின் முடிசூட்டு விழாவின் தருணம், "அதன்படி, ஒரு மன்ட்லீக் "பில்" சர்தாரின் பெருவிரலிலிருந்து ஒழுகும் குருதி சொரிந்து திலக் சடங்கு (மங்கலப் பொட்டிடும் நிகழ்ச்சி) நடைபெற்றது."

இதற்கெனவே, மேவாரின் மாகாண அரசர் சின்னமான ஜெயகோபுரத்தில், ஒருபக்கம் ராஜபுத்திர வீரர் புடைசூழவும் மற்றும் "பில் இனத்தாரின் வில்-அம்பும்" கொண்டுள்ளது காணலாம்.

ராணா பூஞ்சா ஒரு பண்ர்வா திக்கான மகாராணா கி ஜெய் சார்ந்த சிசொடியா ஆவார்.

பாமா ஷா (அல்லது பாமாஷா)

[தொகு]

பாமாஷா மேவாரின் வரலாற்றில் ஓர் அடையாளம் ஏற்படுத்தியர் ஆவார். 450 ஆண்டுகள் முன்னதாக, பார்மல் கவாடியாவின் மகனாகபிறந்த அவர் நேர்மை, திட நம்பிக்கை, மற்றும் கடமை உணர்வு மூன்றிலும் சீரிய எடுத்துக் காட்டாக விளங்கினார்.

அவர் பிரதாபின் பொருளாளர் மட்டுமல்ல, ஒரு வீரனாகி தேவை ஏற்படும் போது போரிட்டவரும் ஆவார். மகாராணா பிரதாப் பன்னிரண்டு வருடங்களாக 25,000 வீரர்கள் அடங்கிய ஒரு படையை நன்கு பராமரித்து வந்ததற்கு உகந்த காரணம், பாமாஷா தனது சொத்தை நன்கொடையாக அளித்தது மட்டுமல்ல, இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிதிஉதவி, மற்றும் இருபதாயிரம் தங்கக் காசுகள் மால்புராவிலிருந்து தொகையாக வழங்கியதும் ஆகும். மேலும் பாமாஷா மஹாராணா அமர்சிங்கிடமும் பணிபுரிந்தவர் ஆவார். அதன்பிறகு அவரது மகன் ஜீவ் ஷா மஹாராணாவின் பொருளாளர் ஆனார். அவர் மரணம் அடைந்த வேளையில் பாமா ஷா தனது மனைவியிடம் அரசரின் பொக்கிஷ விபரங்கள் அடங்கிய விளக்கமான பதிவேடுகளை மஹாராணா அமர்சிங் வசம் ஒப்படைக்கக் கேட்டுக்கொண்ட பிறகே விண்ணுலகு ஏய்தினார்.குறிப்பு- மஹாராணா பிரதாபாஞ்ச ராஜ்வன்ஷ் - ஒரு மராத்திநூல் அதில் மேவாரின் வரலாறு உள்ளது. அதை ஸ்ரீ அசோக் தட்டட்ரைய குல்கர்நி 2008 ஆம் ஆண்டில், வெளியிட்டார்.

பின்விளைவுகள்

[தொகு]
தேவாரில் மஹாராணா பிரதாப்பின் போர் நினைவு.

பிரதாப் ஆரவல்லி மலைத்தொடர் வனப்பகுதிகளில் பின்வாங்கிக் கொண்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரது ஒரு முயற்சியான நேருக்குநேர் மோதல் தோல்வி கண்டமையால், பிரதாப் கொரில்லாச் சண்டை யுக்திகளை மேற்கொண்டார். தனது குன்றுகளைத் தளமாகப் பயன்படுத்தி, பிரதாப் முகாமிட்டிருந்த மொகலாயப் படையினரை பெருமளவில் அலைக்கழிக்கத் தொடங்கினார். அவர் மேவாரில் உள்ள மொகலாயப் படையினர்கள் ஒருபோதும் சமாதானம் காணக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தார்: அக்பர் மூன்று படைஎழுச்சிகள் நடத்தி பிரதாப்பை மலையில் மறைவிடங்களில் தேடிப்பார்த்துக் கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், பிரதாப் பாமாஷாவிடம் நிதிஉதவி, ஒரு நல-விரும்பி என்ற முறையில் பெற்று வந்தார்.[39][40] ஆரவல்லி குன்றுகளில் வாழும் பில் பூர்வீகக் குடிகள் பிரதாப்பிற்கு சண்டைக்காலத்தில் ஆதரவும் மற்றும் சமாதான நாட்களில் காடுகளில் வசிக்க உரிய வழிமுறைகள் கூறியும் உதவி செய்தனர். இவ்விதமாக பல்லாண்டுகள் கழிந்தன. ஜேம்ஸ் டோட் எழுதுவது யாதெனில்: "ஆரவல்லி தொடர்வரிசையில் ஒரு கணவாய் கூட இல்லாததால், மகாராணா பிரதாப் சிங் போன்ற பெரிய சுதந்திர போராளிக்கு வீரச்செயல் புரிய வழியில்லை: ஏதோ பிரகாசமான வெற்றி அல்லது அடிக்கடி மகத்தான தோல்வி இரண்டுமே பெற முடிந்தது." ஒரு சம்பவத்தில், பில்ஸ் தக்க தருணத்தில் ஓடிவந்து ராஜபுத்திரர் பெண்மணிகள் மற்றும் பிள்ளைகளை உதய்பூர் அருகே சாவார் ஆழமான துத்தநாகச் சுரங்கங்கள் ஊடே கடத்திச் சென்று காப்பாற்றினார்கள். பிறகு, பிரதாப் தனது இடம் சாவண்டுக்கு அதாவது மேவாரின் தென்கிழக்குப் பகுதியில் மாற்றி அமைத்துக் கொண்டார்.[41] மொகலாயர்களின் தேடுதல் அலைக்கழிப்பாலே, நாடு கடத்திக் கொண்ட யாவரும் மலையிடுக்குகளில் பல்லாண்டுகளாக காட்டு வகை ரசம் நிறைந்த சிறு பழங்களை (பெர்ரிகள்) உண்டும் மற்றும் வேட்டை ஆடியும் மற்றும் மீன்பிடித்தும் வாழ்வாதாரம் கொண்டிருந்தனர். புராணக்கதைகளின் படி பிரதாப் சிரமமான நாட்களில் புல் விதைகள் மூலம் செய்து வந்த சப்பாத்தியை உண்ண நேர்ந்தது.[42]

ப்ரித்விராஜ் ரத்தோரின் கடிதம்

[தொகு]

ப்ரித்விராஜ் ரத்தோரின் கடிதம் பிரதாப்பிற்கு கவிதை நடையில் அனுப்பியது பின்வருமாறு அமைந்து இருந்தது:[43]

பாடல் சன் பட்ஷா, போலே முக்ஹ ஹுண்ட பயன்
மிஹிர் பிச்சம் திஸ் மாஹ்ன், உகே கசப் ராவ் உட்
' படக்குன் முன்ச்யன் பான், கே படக்குன் நிஜ் தன் கரட்
டிஜே லிக்ஹ தீவான்,இன் டூ மகாலி பேட் இக்
' (பிரதாப்பின் வாயானது "பத்ஷா" என்று சொல்லத் தொடங்கியது. O ராவ்! சூரியன் என்ன மேற்கில் உதிக்க தொடங்கினானா? எனது கரத்தை ஏன் மீசையின் மேலே வைத்திருக்க வேண்டுமா? அல்லது எனது மேனி எனது கரங்களில் விழ வேண்டுமா? ஒ தீவான்! ஒரு விடையை இரண்டில் ஒன்று என்று தேர்வு செய்க).[44]

பிரதாப் இக்கடிதத்திற்கு பின்வரும்படி பதில் கொடுத்தார்.

துரக் கஹசி டுரகடோ, இன் முக்ஹ சன் இக்ளிங்
' உகே ஜய ஹாய் உகசி, பிரசி பிச் படங்
' க்ஹுஷி ஹன்ட் பீத்தல் காமத், படகோ முன்ச்யன் பன்
' ஜெடே ஹாய் பச்சடன் படோ, கிழமா சர் கேவண்
' (லார்ட் எக்ளிங்க்ஜி எனது வாயை எப்பொழுதுமே அவனொரு "துர்க்" என்றே அழைக்கச் செய்வார். சூரியன் எப்போதும் கிழக்கில் தான் உதயம் ஆவான். ஒ ப்ரித்விராஜ் ரதோரே மகிழ்ச்சியாய் இரு மற்றும் உனது கரத்தை உன் மீசைமேலேயே வைத்து இருப்பாய். பிரதாப் தன காலில் நிற்கும் வரைக்கும், அவரது உடைவாள் படையெடுப்பாளர்களின் தலைகளின் மேல் ஊசலாடி கொண்டேயிருக்கும்.)

நாடு கடத்தப்பட்டோர் யாவருமே உண்மையில் பட்டினி கிடக்கும் அவலநிலை வந்த பொழுது, பிரதாப் அக்பருக்கு கடிதம் எழுதினார் அதில் அவர் ஒரு சமாதான உடன்பாடு செய்யச் சித்தமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். பிரதாப்பின் முதல்மைத்துனர் (அவரின் தாயாரின் சகோதரியின் பிள்ளை) ப்ரித்விராஜ் ரதோரே, அவர் அக்பரின் சபையோர்களில் ஒருவராவார், அவர் இந்த தனிமுறைக் கோரிக்கை பற்றி கூறுவதாவது: அவர் வளர்ந்தவராயினும் சோர்வுற்று இருதார் மற்றும் தனது மைத்துனர் பிரதாப்பிற்கு எழுதினார்:

இந்துவின் நம்பிக்கைகள் இந்து சூர்யன் உதிப்பதில் தான் உள்ளது இருப்பினும் ராணா அவைகளைக் கைவிட்டுள்ளார். ஆனால் அது பிரதாபிற்காக, எல்லாமே அக்பரால் ஒரே அளவில்தான் கருதப்படும்; ஏனெனில் நம்முடைய முதல்வர்கள் தங்கள் தைரியம் இழந்துள்ளனர் மற்றும் நமது பெண்கள் தங்கள் மதிப்பை இழந்துள்ளனர். நமது இனத்தில் அக்பர் ஒரு சந்தைத் தரகராகவே உள்ளார்; அவர் அனைத்தையும் மொத்தமாக விலை தந்து வாங்கியுள்ளார் ஆனால் உதய்யின் மகன் மட்டும் (சிங் II மேவார்); அவர் அவரது விலைக்கு மிக தூரமாக இருந்தார். எத்தனை உண்மையான ராஜபுத்திரர்களால் மதிக்கப்பட்ட நௌரோசா என்ற [பாரசீகப் புத்தாண்டு பண்டிகையின் பொழுது, அக்பர் தனது சுகபோகம் நாடி பெண்களை தேர்வு செய்வது]; இருப்பினும் எத்தனை பேர்கள் தான் பண்டமாற்றாகக் கருதி செய்துள்ளனர்? சித்தூர் இந்த சந்தைக்கு வருமா . . . ? பட்டா என்று (அன்புடன் அழைக்கப்பட்ட பிரதாப்சிங்) தனது சொத்தையே (போர்முறை யுக்திகளுக்காக), மற்றும் படைப்பிரிவுகளுக்காகவே செலவிட்டார், இருந்த போதிலும் அவர் இந்த பொக்கிஷத்தைப் பேணிப் பாதுகாத்தார். மனக்கசப்பு மனிதனை இந்த சந்தைக்குத் தள்ளியது, அவர்கள் சுயகெளரவம் பாதிக்கப்படுவதை கண்கூடாகக் கண்டனர்: அப்படிப்பட்ட பழியில் இருந்து ஹம்மிர் (மகா ராணா ஹம்மிர்) வழித்தோன்றல் மட்டுமே பாதுகாக்கப்பட்டார். உலகம் கேட்கலாம், பிரதாப்பிற்கு எங்கிருந்து மறைமுக உதவி வெளி வந்தது? எங்கிருந்தும் அல்ல ஆனால் அவரது ஆண்மை மற்றும் வாளில் இருந்தே வந்தது. மனிதச் சந்தையின் தரகரான (அக்பர்) நிச்சயம் ஒருநாள் இந்த உலகை விட்டுப் போகத்தான் போகிறார்; அவர் நிரந்தரமாக நீண்டு வாழப் போவதில்லை. அப்போது நமது இனம் பிரதாப்பை நோக்கி வரப் போகிறதா, மனிதவாசம் இல்லாத நிலங்களில் ராஜபுத்திர விதைகள் தூவப் போவது யார்? அவரைப் பொறுத்த மட்டிலும் எல்லாருமே அதனைப் பாதுகாக்கவே விரும்புகிறனர், அதன் தூய்மை மீண்டும் உயிர்கொண்டு ஒளிவிளக்கம் பெற விழைகின்றனர் என்பதுதான். பிரதாப் அக்பரை சக்ரவர்த்தி என்று அழைத்திருந்தால் அது நம்பத்தக்கதல்ல எப்படி சூரியன் மேற்கு திசையில் உதிக்கின்றான் என்றால் எப்படியோ அப்படித்தான் அதுவும். நான் எங்கே நிற்க வேண்டும்? எனது வாளை என் கழுத்தில் வைப்பதா? அல்லது அதை பெருமையுடன் ஏந்திக் கொண்டு இருப்பதா? என்பதை கூறவும்? என்றான்.[45]

பிரதாப் அவருக்குப் பின்வருமாறு பதில் அளித்தார்.[46]

எனது கடவுள் ஏகலிங்கா, பிரதாப் அழைப்பது துருக்கியச் சக்ரவர்த்தி என்று மட்டும் தான், 'துருக்கிய' என்ற சொல் பல இந்திய மொழிகளில் இழிவுப் பொருள் பயப்பதாகும் மற்றும் சூரியன் கிழக்கில் நிச்சயம் தோன்றுவான்." பிரதாப்பின் வாள் மொகலாயர்களின் தலைமீது ஊசலாடுகின்றவரையில் நீங்கள் உங்களது பெருமையைத் தாங்கிச் செல்லலாம். "சங்காவின் குருதியைப் பொறுத்தவரை பிரதாப் குற்றமுள்ளவனாக இருக்கலாம், அவன் அக்பரைப் பற்றி சகித்துக் கொள்ளவேண்டுமானால்! நீங்கள் இந்த வார்த்தை யுத்தத்தில் மேம்பட்டு இருக்கலாம்."

பிரதாபுக்கும் மற்றும் அக்பருக்கும் இடையே மறுசீரமைப்பு தொடக்கநிலையிலேயே இவ்வாறு முற்றுப்பெற்றது. இந்த ப்ரித்விராஜ், ஷக்தி சிங்கின் சகோதரி கிரன்மாயேவின் கணவராவார்.(மஹா ராணா பிரதாப்பின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்).[47]

அக்பரின் படையெடுப்புகள்

[தொகு]

அக்பரோ மஹாராணா பிரதாப்பை எதிர்த்து படையெடுப்பு ஒன்றன்பின் ஒன்றாக நடத்திக்கொண்டே இருந்தார், ஆனாலும் ஒருபோதும் அவர் வெற்றி பெறவில்லை. ஏராளமான அளவில் அவர் பணச்செலவு செய்தும் மஹாராணா பிரதாபைத் தோற்கடிக்க முடியவில்லை. முப்பது ஆண்டுகள் மேலாக பிரதாப் அக்பரை விஞ்சியே இருந்தார் மற்றும் அவரது வாழ்க்கையில் கடைசி பத்தாண்டுகள் தனது ராஜ்யத்தின் பெரும்பகுதியை விடுவித்திருந்தார். அவரால் பிடிக்க முடியாதவைகள் சித்தூர் மற்றும் மண்டல் கர்ஷ் இரண்டுமேதான் அவரை அவைகள் அதிகம் வருத்தம் அடையச் செய்தது.[48]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ராணா பிரதாப் பதினேழு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் கொண்டிருந்தார். உதய் சிங் II ஆண்-வரிசை வழித்தோன்றல்கள் "ரானாவட்" என்ற தந்தைவழிப் பெயரைத் தாங்கி உள்ளனர். இத்தகைய தந்தைவழிப் பெயர்கள் ஆட்சியாளர்கள் தங்களது நாட்டைவிட்டு ஓடிப்போகும் போதோ மற்றும் புதிய தலைநகர் ஏற்படுத்தும் போதோ மாற்றம் கொள்ளும். குஹிலோட் என்பவர்கள் குஹவின் வழித்தோன்றல்கள் ஆவார்கள், சிசொடியாக்கள் சிசொட கிராமத்தின் ஹமீர் குஹிலோட்டின் வழித்தோன்றல்கள் ஆவார்கள் மற்றும் ரணவட்கள் ராணா உதய் சிங்கின் வழித்தோன்றல்கள், அவர்கள் சித்தூர் விட்டு ஓடி ஒரு புதிய தலைநகர் உதய்பூர் என்று ஏற்படுத்திக்கொண்டார்கள். தந்தைவழி பெயர்மாற்றம் என்பது பெருமளவில் ஜனத்தொகை இடம்பெயர்ந்தாலோ அல்லது போரிட்டாலோ தோன்றிவரும்.[49]

இறுதி நாட்கள்

[தொகு]

மஹா ராணா பிரதாப் வேட்டையாடும் பொழுது ஏற்பட்ட விபத்தால் மரணம் அடைந்தார். அவர் சாவண்டில் ஜனவரி 29, 1597, நாளன்று மரணம் அடைந்தார், அப்பொழுது அவருக்கு வயது ஐம்பத்து-ஆறாகும். மரணம் அடையும் தருவாயில் தனது மகன், அமர்சிங்கை அவருக்கு அடுத்த வாரிசாக்கி தொடர்ந்து நிரந்தரமாக மொகலாயர்களுடன் போரிட்டுக்கொண்டே இருக்கும்படி பிரமாணம் எடுத்துக்கொள்ளச் செய்தார். இவ்வாறாக, அவரது சிரமமான சூழ்நிலைகள் அவரது சரிவடைந்த வருடங்களில் அதிகவலுப்பெற வைக்கவில்லை; இறுதிவரை துணிச்சலாகவே நிமிர்ந்து இருந்தார்.[50] அவர் படுக்கையில் தூங்காமலேயே வாழ்ந்து வந்தார், அக்பரிடம் இருந்து மொத்த ராஜ்ஜியம் மீட்டு கைவரப் பெற்றும் அவரது சபதம் சித்தூரைக் கைப்பற்றும் வரை தரையில்தான் தூங்குவது மற்றும் ஒரு குடிலில் தான் வாழ்வது என்பதைக் காத்து வந்தார்.[51]

மஹாராணா பிரதாப்பின் மகன், அமர்சிங், மொகலாயர்களுடன் பதினேழு முறைகள் யுத்தங்கள் செய்தார் ஆனாலும் அவர் நிபந்தனையின் பேரில் அவர்களை ஆட்சி யாளர்கள் என்று ஒப்புக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மகாராணா பிரதாப்பின் நம்பகத்துக்குரிய ராஜபுத்திரர்கள் சரணடைதல் என்ற மாயையில் இருந்து விடுபட்டு ராஜஸ்தானில் இருந்தே வெளியேறினர். இந்தக் கூட்டம் ரதோர்கள், தியோர சொவ்கன்கள், பரிஹரகள், டோமராக்கள், கச்ச்வாஹ்க்கள் மற்றும் ஜ்ஹலக்கள் ஆகியோர் அடங்குவர். அவர்கள் "ரோர்கள்" என்று அழைக்கப்படுவர் மற்றும் ஹரியானாவில் குடியமர்ந்தனர், ஒருசிலர் மட்டுமே உத்திர பிரதேசத்தில் இடம்பெயர்ந்தனர். இன்றைய தினம் கூட, அவர்கள் பிற ராஜபுத்திரர்களுடன் மணம்புரிந்து கொள்வது கிடையாது ஆனாலும் "கோத்ரா அனுமதிபெறுதல்" ரோர் சமுதாயத்திற்குள்ளேயே நிகழ்ந்து வருகின்றது.[52]

மஹாராணா பிரதாப் ஒருபெரும் நாயகனாக இந்தியர்களின் பார்வையில் விளங்குகிறார், அவர்தன் மக்களால் அதிகம் மதிப்பும் மற்றும் அன்பும் செலுத்தப் படுகின்றவராகவே விளங்குகிறார். இந்து வரலாற்றில் ஒரு இருளான அத்தியாயத்தில், பிரதாப் மட்டுமே தன் கெளரவம் மற்றும் கண்ணியம் கருதி தன்னந்தனியானாக உறுதிபட நின்றார்; தனது கௌரவத்தை சுயபாதுகாப்பிற்காக ஒருபோதும் அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. அவர் ஒரு பெருமைக்குரிய மற்றும் சுதந்திரமான மனிதராகவே இறந்தார்.[53]

நற்பண்பு

[தொகு]

ஹல்டிகாடி போருக்கு முன்னதாக, மான்சிங் கச்ச்வஹா எஞ்சி இருந்த ஒருசில நூற்றுக்கணக்கான எதிரிகளைத் தேடிக் கொண்டிருந்தார். பிரதாபின் பில் ஒற்றர்கள் அந்த முகாமிலிருந்து ஒருசில கிலோ மீட்டர்கள் தொலைவில் அவருக்கு செய்திகளை தெரிவித்தனர். பிரதாபின் சில பிரபுக்கள் அத்தகைய நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மான் சிங்கைத் தாக்கிக் கொல்லவேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். பிரதாப் மறுப்புரைத்தார், அவ்வகையில் தனது நேர்மை உணர்வை எடுத்துக் காட்டினார்.[54]

மற்றுமொரு சம்பவத்தில், அப்துர் ரஹீம் க்ஹன்க்கனா என்னும் மொகல் அதிகாரியின் பெண்மணிகள், பிரதாபின் மகன் அமர்சிங் வசம் அகப்பட்டுக்கொண்டனர். அந்த சரியான நேரத்தில், க்ஹன்க்கன பிரதாப்பை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தார் மற்றும் செர்புரில் முகாமிட்டு இருந்தார் அதன்படி பிரதாப்பை நேரடியாகத் தாக்க முன்னேற்பாடுகள் செய்துகொண்டு இருந்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், பிரதாப் தனது மகன் அமர்சிங்கை (பதினேழு மகன்கள் மற்றும் ஐந்து மகள்களில் மூத்தவர்) அந்த மொகலாயப் பெண்மணிகளைப் பத்திரமாக அவர்களது முகாமில் கொண்டு சேர்க்குமாறு கட்டளை இட்டார்.[2] க்ஹன்க்கன இந்த நிகழ்ச்சியால் வெகுவாகப் பாதிப்படைந்தார் மேலும் ஒரு வீரப் பெருந்தகைமையாளர் ஆன மாமன்னரை எதிர்த்து நிற்க மறுத்துவிட்டார். அவர் அக்பரிடம் ஒரு மனு அளித்து தன்னை பதவியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து பின்னர் (1581 ஆம் ஆண்டில்) அக்பரின் மகன் சலிம்க்கு மெய்க்காப்பாளராக ஆனார். மேலும் ஒரு கொள்கைக்குரல் "ஜோ த்ரித் ரகே தர்ம், நே தாஹி ரகே கர்த்தார்" அப்துர் ரஹீம் க்ஹன்க்கன சொன்னதாக நம்பப்படுகிறது அவர் மேலும் "ரஹீம் தாஸ்" என்றும் ஹிந்திச் செய்யுளில் அழைக்கப்படுகிறார்.[55]

தற்போதைய-நாள் நிலவரம்

[தொகு]

இந்தியாவின் சுதந்திரம் 1947இல், பெற்றதைத் தொடர்ந்து, மகாராணா பூபால்சிங் (பதவிக் காலம் 1930-1955) என்பவர் மகாராஜ் பிரமுக் ராஜஸ்தான் மாநில (~ ஆளுநர் ) 1952-1955 –அந்த ஒரேபதவிதான் இந்தியக் குடியரசு மேவாருக்காக ஏற்படுத்தியுள்ளது! மகாராணா பூபால்சிங் தான் முதன்முதல் தனது மாநிலத்தை சுதந்திர இந்தியாவுடன் (18 ஏப்ரல் 1948)இணைத்துக் கொண்ட மன்னராவார்.[56] இந்தியாவின் முதல் யூனியன் உள்துறை அமைச்சர் (லோஹ் புருஷ் - இரும்பு மனிதர்) சர்தார் வல்லபாய் படேல் யூனியனில் சேரத் தயங்கிய ஹைதராபாத் மற்றும் பிற மாகாணங்களை வன்மையாகக் கடிந்துரைக்கும் கண்டனம் தெரிவித்துக் கூறினார், "இந்தியாவில் எந்த ஒரு சுதேச சமஸ்தானம் சுதந்திரம் கோரும் உரிமை பெற்று உள்ளது என்றால் அது மேவார் ஒன்றுதான், ஆனால் அதுவோ சந்தோஷமாகவும், சம்மதமாகவும் இந்திய தேச யூனியனுடன் சேர்ந்து கொள்ள விரும்புகின்றது, அதன் கூற்றுப்படி, அவர்களின் பதிமூன்று நூற்றாண்டுகள் மேற்கொண்ட தூதுக்குழுவின் முயற்சிகள் முழுப்பலன் தந்துள்ளது . . . மேவாரைத் தவிர்த்து மற்ற எந்த ஒரு சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு உரிமையேதும் கிடையாது . . ." சுதந்திரம் பெற்ற பிற்காலத்தில் கூட, இந்தியாவின் பொதுமக்கள், இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் அரசியல் வாதிகள் எவ்வகையிலும் பிரதிபலன் எதிர்பாராமல் மேவாருக்கு மதிப்பும், மரியாதையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தனர். மேலும் குறிப்பிடத்தக்க இந்திய சுதந்திரப் போராளியும், யூனியன் அமைச்சரும் மற்றும் பாரதிய வித்யா பவன் நிறுவனரும், நவீன காலத்து இந்தியாவின் பெருமைக்குரிய மனிதர்களில் ஒருவருமான, கே.எம். முன்ஷி (1887-1971) எழுதியுள்ளதாவது, "மேவாரின் மகாராணாக்கள் ஹிந்துப் பண்பாடு மற்றும் ஆட்சிஅமைப்பு ஒழுங்கு இரண்டையும் சிறப்பாகவும், உயர்குடிப்பிறப்பாகவும் வெளிப்படுத்திக் காட்டினார்கள். ராம்ராஜ்ஜியம் என்பதன் புராணியக் கோட்பாட்டை நடைமுறையில் அமுல்படுத்தி வைத்தார்கள்.[57]

மஹாராண பிரதாப் இந்தியாவில் மிகுந்த உயர்வான மதிப்பு கொண்டவராகவும் மற்றும் தேசப்பற்று மற்றும் சுதந்திரப்போர் மொகலாய ஆட்சியைத் துணிந்து எதிர்த்து நிகழ்த்தியதில் ஒரு முன்மாதிரியாகவும் சித்திரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றார். பிரதாப் மற்றும் சேடக் பெயர்கள், அப்பொலிகுதிரை, யாவுமே பிரசித்திப் பெற்றதாகும் மற்றும் இந்தியக் குடியரசு அரசாங்கம் அவைகளின் நினைவாக தபால் தலைகள் (1967, 1998) மற்றும் நாணயங்கள் (2003) வெளியிட்டு இந்தியாவின் மிகப்பெரும் மகனாரை கௌரவப்படுத்தியது. நன்றியோடு நாடானது சேடக் மீது ஏறி உள்ள பிரதாப்பின் சிலையை அவரது கூட்டுப் பணியாளர்களான-ஜஹல மான், பிலு ராஜா (மலைவாழ் மக்கள் முதல்வன்), பாமா ஷா, ஹக்கீம் கான் சூர், மற்றும் ஒரு காலாட்படை-வீர-சேவகன் அனைவரது சிலைகளுடன் புது டெல்லியில் நாடாளுமன்ற இல்லத்தின் முன்னால் ஆகஸ்ட் 21, 2007இல் நிறுவி அஞ்சலி செலுத்தி வருகின்றது.[1] பரணிடப்பட்டது 2013-01-16 at the வந்தவழி இயந்திரம்[58]

மஹாராணா பிரதாப் பற்றிய ஒரு வெள்ளித்திரைப் படம் தயாரிப்புப்பின்- பணிகளில் உள்ளது. எல்லா விவரங்களும் அதனுடைய இணைய தளத்தில் கிடைக்கப் பெறலாம்.

மோடி மக்ரி

[தொகு]

மஹாராணா பிரதாப்பின் வெண்கலச் சிலை மற்றும் அவரது விருப்பமான, உண்மையான புரவி, வீரமாகப் போராடி தனது எஜமானைக் காத்து வந்ததாலும் உயிர்பிரியும் வரை உடன் இருந்ததாலும், மோடி மக்ரியின் உச்சியில் (முத்து மலை) பதெஹ் சாகரில் கம்பீரமான குதிரைச் சிலையும் உள்ளது. உள்ளூர் மக்கள் அந்தக் குன்றின்மீது ஏறிச் சென்று மஹா ராணா பிரதாபிற்கும் மற்றும் அவரது உண்மையான புரவி 'சேடக்'கிற்கும் அது ஹல்டிகாடி யுத்தத்தில் கொல்லப் பட்டதால் அதற்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.[59] அங்கே மேலும் முதல் உதய்புரின் அமைதியான அரண்மனையின் சிதலங்கள் காணலாம் மற்றும் ஓர் அழகான ஜப்பானிய பாறைத் தோட்டம் ஒன்று அதிக தூரம் இல்லாமல் அமைந்துள்ளது. அந்த நினைவகமானது முதல்ஒளி மற்றும் ஓலிஅமைப்பு ஏற்படுத்தப்பட்டு ராஜஸ்தானில், மேவாரின் 1400 வருடங்களான கீர்த்திமிகு வரலாற்றை பறைசாற்றிக் கொண்டு வருகின்றது.[60]

வாள்

[தொகு]

நாற்பது கிலோ கிராம் எடையுள்ள வாள் ராணா பிரதாப் சிங் பயன்படுத்தியது. ராணா பிரதாப் இரண்டு வாட்களை தன்னுடன் ஏந்திச் செல்வது அவரது வழக்கமாகும். சண்டை ஏற்படும் போது தனது எதிரிக்கு ஒரு வாளினை அவர் நிராயுதபாணியாக இருந்தால் வழங்குவதுண்டு.[61]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "மகாராணா பிரதாப் அளவு அக்பர் பேரசரர் இல்லை : யோகி ஆதித்யநாத்". Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-15. Archived from the original on 2020-11-24. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  2. 2.0 2.1 Team, DNA Web (2018-05-09). "Remembering Maharana Pratap Singh: 10 little known facts about the Rajput warrior". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  3. "மஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது? - ஃபேஸ்புக் வதந்தி". FactCrescendo | The leading fact-checking website in India (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  4. "Maharana Pratap के ये अनमोल विचार, बदल देंगे आपके सोचने का नजरिया". Zee News Hindi. 2020-05-09. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  5. Chandra 2005, ப. 6.
  6. Rana 2004; 7-9 Sarkar; 1960 79.
  7. Rana 2004, pp. 17-20; Bhatt 2011, p. 12.
  8. Rana 2004, ப. 4-5.
  9. Sarkar 1960, ப. 6-9.
  10. "Defending India | SpringerLink". link.springer.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. Sarkar 1960, ப. 80.
  12. [[71] ^ 71]^ ஜேம்ஸ் டாட், ராஜஸ்தானின் அல்லது இந்தியாவின் மத்திய மற்றும் மேற்கத்திய ராஜ்புட் பகுதிகளின் வரலாற்று சுவடுகள் மற்றும் தொல்பொருட்கள், 2 தொகுப்புகள் லண்டன், ஸ்மித், எல்டர் (1829, 1832); நியூ டெல்லி, முன்ஷிராம் பப்ளிஷேர்ஸ், (2001), பக்கம் 83-4. ஐஎஸ்பிஎன் 8170691281
  13. "Maharana Pratap Jayanti 2020 Hindi: Biography, Death, History". S A NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  14. Bhatt 2011, ப. 26.
  15. Sharma 2011, ப. 9.
  16. Bhatt 2011, ப. 17.
  17. "मेवाड़ का वीर योद्धा महाराणा प्रताप | history of maharana pratap in hindi | Webdunia Hindi". web.archive.org. 2019-07-28. Archived from the original on 2019-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  18. "pratap jayanti - Kolkata News in Hindi - 'स्वाभिमान की जंग में प्रताप ने दे डाली प्राणों की आहुति' | Patrika Hindi News". web.archive.org. 2019-05-17. Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  19. "Indian History and Culture | History of India | India History | भारतीय इतिहास". m-hindi.webdunia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  20. Chandra 2005, ப. 45.
  21. Rana 2004, ப. 45-48.
  22. "महाराणा प्रताप के विषय में भारतीय इतिहास में लिखी भ्रांतियों को दूर करती विजय नाहर की पुस्तक 'हिंदुवा सूर्य महाराणा प्रताप' की समीक्षा ·". web.archive.org. 2019-05-09. Archived from the original on 2019-05-09. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  23. 23.0 23.1 Sarkar 1960, ப. 81.
  24. Sarkar 1960, pp. 80-81; Bhatt 2011, p. 89.
  25. gkclean (2020-08-16). "ஹால்டிகாட்டி போர் எப்போது நடந்தது?". Objective GK (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  26. Salam, Ziya Us. "A new book dispels some myths on Maharana Pratap". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  27. Sharma 2011, ப. 43.
  28. Rana 2004, ப. 56.
  29. Rana 2004, ப. 45-123.
  30. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  31. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  32. "हिंदी खबर, Latest News in Hindi, हिंदी समाचार, ताजा खबर". Patrika News (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  33. Team, DNA Web (2018-05-09). "Remembering Maharana Pratap Singh: 10 little known facts about the Rajput warrior". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  34. "Akbar versus Maharana Pratap: What really happened at Haldighati". www.dailyo.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  35. "Maharana Bhim Singh in Procession". The Art Institute of Chicago (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  36. "பிரபலக் குதிரைகள்: வெற்றிகளை ஈட்டிய குதிரைகள்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  37. Bhatt 2011, ப. 56-61.
  38. Sharma 2011, ப. 89.
  39. "महाराणा प्रताप के विषय में भारतीय इतिहास में लिखी भ्रांतियों को दूर करती विजय नाहर की पुस्तक 'हिंदुवा सूर्य महाराणा प्रताप' की समीक्षा | Daily Kiran : Latest News Headlines, Current Live Breaking News from India & World". web.archive.org. 2019-05-10. Archived from the original on 2019-05-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  40. भारद्वाज, अनुराग. "महाराणा प्रताप : जिनके लिए मेवाड़ सिर्फ एक राज्य नहीं था". Satyagrah (in இந்தி). Archived from the original on 2020-05-13. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  41. Bhatt, Rajendra Shankar (2011). Maharana Pratap. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-4339-4. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)
  42. WD. "दिवेर का महायुद्ध, हल्दीघाटी के बाद यहां महाराणा प्रताप ने हराया था मुगल सेना को, कहा जाता है 'मैराथन ऑफ मेवाड़'..." hindi.webdunia.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  43. "पृथ्वीराज द्वारा राणा प्रताप का स्वाभिमान जाग्रत करना - भारतकोश, ज्ञान का हिन्दी महासागर". bharatdiscovery.org. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  44. "राजकुमार पृथ्वीराज 'पीथळ', बीकानेर". Gyan Darpan (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  45. Hooja, Rima (2018-10-15). "After Haldighati, this is how Maharana Pratap used guerrilla warfare to elude Akbar". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  46. "found this | Bharat Ka Veer Putra -Maharana Pratap". India Forums (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  47. Sharma 2011, ப. 78.
  48. "The legacy of India's Maharana Pratap lives on today". www.linkedin.com. Archived from the original on 2021-10-11. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  49. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  50. Bhatt 2004, ப. 89.
  51. Sharma 2011, ப. 115-120.
  52. "महाराणा प्रताप : जिनके लिए मेवाड़ सिर्फ एक राज्य नहीं था". web.archive.org. 2020-05-13. Archived from the original on 2020-05-13. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  53. Chandra 2011, ப. 178-179.
  54. Bhatt 2011, ப. 123-125.
  55. "A History Of The Modern World". www.goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  56. Rana 2004, ப. 89-97.
  57. Hooja, Rima (2018-10-15). "After Haldighati, this is how Maharana Pratap used guerrilla warfare to elude Akbar". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  58. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (2014-07-10). Encyclopedia of Indian Cinema (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-94318-9.
  59. Sharma 2011, p. தெரியவில்லை; Rana 2004, p. intro.
  60. Rana 2004, ப. 290-298.
  61. Bhatt 2011, ப. 190-193.

இருக்கை புத்தகம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராணா_பிரதாப்&oldid=3829474" இலிருந்து மீள்விக்கப்பட்டது